search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக தீமைகளுக்கு எதிரான அரண்"

    பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்ற பெண்கள், சமூக தீமைகளின் அரணாக விளங்குவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். #ModiInteracting #SelfHelpGroups
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெண்களின் விடாமுயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு எனக்கு மிகுந்த உத்வேகத்தை தந்தது. பெண்கள் தற்போது அனைத்து துறையிலும் குறிப்பாக விவசாயம் மற்றும் பால் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இரண்டு துறைகளும் பெண்கள் இல்லாமல் ஜொலிக்க முடியாது.



    பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பு அளப்பரியது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்கள் பொருளாதார விழிப்புணர்வும், வலுவும் அடைய உதவுகிறது. நிதி சுதந்திரமானது, பெண்களை உறுதியானவர்களாகவும், அதிகாரம் மிக்கவர்களாகவும் உருவாக்குகிறது. நிதி அதிகாரம்மிக்க பெண்கள், சமூக தீமைகளுக்கு எதிரான அரணாகத் திகழ்கிறார்கள்.

    தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள இரண்டரை லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இது அனைத்து மாநிலங்களிலும் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். #ModiInteracting #SelfHelpGroups
    ×